தமிழ்நாட்டில் அதிமுகவை முந்தும் நாம் தமிழர்.., சீமானுக்கு நல்ல செய்தி சொன்ன பத்திரிக்கையாளர்
தமிழ்நாட்டில் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைவதால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரலாம் என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் கூறியுள்ளார்.
சீமானுக்கு நல்ல செய்தி
தனியார் சேனல் ஒன்றிற்கு மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் கொடுத்த பேட்டியில், "தமிழ்நாட்டில் என்ன தான் தேசிய கட்சிகள் தண்ணீர் குடித்தாலும் வலிமை பெறாது. பாஜகவால் வர முடியாது.
அதேபோல வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் முன்னேற முடியாது. அவர்களின் கட்சிக்குள் உட்கட்சி மோதல் இருக்கிறது.
அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு சதவீதம் வாக்குகள் கூடியுள்ளது என்கிறார்கள். கடந்த முறையை விட 10 இடங்களில் அதிகமாக போட்டியிட்ட நிலையில் அதிமுகவால் எப்படி முன்னேற முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தேசிய கட்சியை ஆதரிக்க மாட்டார்கள், மாநில கட்சியை தான் ஆதரிப்பார்கள். இதனால் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் வளரலாம். அவரும் விஜயும் இணைந்தால் கூடுதல் வலிமை பெறும்.
அப்போதும் கூட சட்டசபையில் பாஜக மூன்றாம் இடத்திற்கே செல்லும். அதிமுக இனி ஒன்றுசேரவில்லை என்றால் அந்த கட்சி காணாமல் போகும். அதிமுக தெற்கில் 3ம் இடத்திற்கு சென்றுள்ளது.
இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வளரலாம். 2026ல் அதிமுகவை புறக்கணித்துவிட்டு நாம் தமிழர் அந்த இடத்தை பிடிக்கலாம்" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |