திமுக - அதிமுக பிரச்சனை ஒரு தெரு சண்டை- சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் வள்ளலார் சத்ய ஞான சபையில் வழிபட்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியுள்ளார்.
சீமான் கூறியதாவது..,
"திமுக - அதிமுக பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள்.
திமுக வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அதிமுக வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறி கூறி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். முட்டுக்கட்டை நிர்வாகிகளாக இருப்பார்கள்.
நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை. நிர்வாகிகள் விலகல் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
சிற்றூர்களையெல்லாம் நகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.
கிராமங்களில் இருந்துதான் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வருகிறது. அதனால்தான் எங்களை அப்படியே வாழ விடுங்கள் என்கிறார்கள், இதில் என்ன பிரச்சனை.
மேலும், தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது. வில்லேஜ் சிட்டி உள்ளதா?" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |