பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிரித்தானியர்கள்: உண்மையான எண்ணிக்கை என்ன?
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை என முன்னர் வெளியான தகவலைக் காட்டிலும், உண்மையில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளியேறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிரித்தானியர்கள்
கடந்த ஆண்டில், பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிரித்தானியர்கள் எண்ணிக்கை 77,000 என முன்னர் தகவல் வெளியான நிலையில், உண்மையில் 257,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதாக தற்போது தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பிரித்தானியாவுக்குத் திரும்பிய பிரித்தானியர்கள் எண்ணிக்கை 60,000 என முன்னர் கூறப்பட்ட நிலையில், 143,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
புலம்பெயர்தலை பெரும் அரசியலாக்கிவரும் பிரித்தானிய ஆளுங்கட்சிக்கும் ஒரு நல்ல செய்தி.
ஆம், 2024, டிசம்பர் நிலவரப்படி, நிகர புலம்பெயர்தல், 345,000. முந்தைய கணக்கீட்டின்படி, நிகர புலம்பெயர்தல் 431,000 என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
