சுவிட்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை
சுவிட்சர்லாந்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் ஏற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் அதிகரிப்பு தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 14,928 பேர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இது 2020ம் ஆண்டை ஒப்பிடுகையில் 3,887 பேர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால் 2019ல் இந்த எண்ணிக்கையானது 14,269 என பதிவாகியிருந்தது. தற்போது விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானில் இருந்தே (3,079) புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து துருக்கி, எரித்திரியா, சிரியா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசியல் நெருக்கடி காரணமாக சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து 1,380 பேர்கள் சுவிட்சர்லாந்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 2020 ஐ ஒப்பிடுகையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 14.3% அதிகரித்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.
ஆனால் சுவிட்சர்லாந்தில் இருந்து கடந்த ஆண்டில் 973 பேர்கள் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.