சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்தது
இந்த ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்தது
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் நிகர எண்ணிக்கை 6,237 குறைந்து, 40,963 ஆக ஆகியுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலகட்டத்தில் 80,684 பேர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து நிரந்தர வெளிநாட்டுக் குடியிருப்பாளர்களாக குடியமர்ந்துள்ளார்கள்.
இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 5.9 சதவிகிதம் குறைவாகும்.
அதே நேரத்தில், அதே காலகட்டத்தில், 35,184 பேர் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறியதாக சுவிஸ் புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 732 அதிகமாகும்.
வெளியேறியவர்களில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தகக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், 27,017 பேர். மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் 8,167 பேர் ஆவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |