வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள்
ஒருவர் ஒரு நல்ல பிரித்தானிய குடிமகனாக இருக்கவேண்டும் என்றால், அவர் வெள்ளையராக இருக்கவேண்டும், பிரித்தானியாவில் பிறந்தவர்கள்தான் பிரித்தானியர்கள் என்பது போன்ற கருத்துக்கள் பிரித்தானியர்களிடையே அதிகரித்துவருவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள்
Institute for Public Policy Research (IPPR) என்னும் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பிரித்தானியாவில் பிறந்தவர்கள் மட்டுமே பிரித்தானியர்கள் என்னும் கருத்து பிரித்தானியர்களிடையே அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 36 சதவிகிதம் பேர், ஒருவர் உண்மையான பிரித்தானியர் என்றால், அவர் பிரித்தானியாவில் பிறந்தவராக இருக்கவேண்டும் என கருதுவதாக தெரிவித்துள்ளார்கள்.
Tayfun Salcı/EPA
2023இல் இந்த கருத்து கொண்டவர்கள் 19 சதவிகிதமாக மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், நைஜல் ஃபராஜின் Reform UK கட்சியை ஆதரிப்பவர்கள்தான் அதிக அளவில் இத்தகைய கொள்கையை உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நைஜல் ஃபராஜின் ஆதரவாளர்கள், ஒருவர் பிரித்தானியராக இருப்பதற்கான முக்கியமான தகுதிகளில் ஒன்று, அவர் வெள்ளையராக இருப்பது என்றும் நம்புவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |