பிரான்சில் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் உடலில் எழுதப்பட்டிருந்த எண்கள்: சில திடுக் தகவல்கள்...
பிரான்சில் மாயமான இளம்பெண் ஒருவர் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
அந்தப் பெண்ணுடைய பெயர் முதலான விவரங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத லோலா (Lola Daviet, 12) என்னும் மாணவி, பின்னர் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் கொல்லப்படும் முன் வன்புணரப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 24 வயது பெண் ஒருவரும், 43 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கொலைக்கான நோக்கம் தெரியவராத நிலையில், கொலை செய்யப்பட்ட லோலாவின் உடலில் 1 மற்றும் 0 ஆகிய எழுத்துக்கள் காணப்படுவதால் அது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவரையும் கைது செய்துள்ள பொலிசார், அவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.