ரூ.64,999-க்கு புதிய மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய Numeros
நியூமெரோஸ் (Numeros) நிறுவனம் ரூ.64,999-க்கு புதிய மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட நியூமெரோஸ் மோட்டார்ஸ் நிறுவனம், நகர்ப்புற பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய மின்சார இருசக்கர வாகனமான n-First மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வாகனம், முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்காக ரூ.64,999 என்ற ஆரம்ப விலையில் வழங்கப்படுகிறது.
இது மோட்டார் சைக்கிளின் வேகத்தையும், ஸ்கூட்டரின் வசதியையும் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், குறிப்பாக பெண்களுக்காக இது சிறப்பாக பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தயாரிப்பு இத்தாலிய Wheelab வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
n-First மொடல் 5 வகைகளில், Traffic Red மற்றும் Pure White என்ற 2 நிறங்களில் கிடைக்கிறது.
அதில் i-Max+ எனப்படும் மேம்பட்ட மொடல் 3kWh பேட்டரியுடன் 109km வரை பயணிக்க முடியும். மற்ற மொடல்கள் 2.5kWh பேட்டரியுடன் 91km வரை பயணிக்கக்கூடியவை. அனைத்தும் PMSM மோட்டாருடன் செயல்படுகின்றன.
16-இன்ச் சக்கரங்கள், OTA மென்பொருள் அப்டேட்கள், மற்றும் செயலி வழியாக geo-fencing, live tracking, remote locking போன்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.
நியூமெரோஸ் நிறுவனம் 2020-இல் தொடங்கப்பட்டது. தற்போது தென்னிந்திய நகரங்களில் விற்பனை மையங்களை விரிவுபடுத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Numeros n-First electric bike, n-First EV launch price India, electric scooter for women India, affordable EV two-wheeler 2025, Numeros Motors new EV model, n-First i-Max+ specs and range, urban electric mobility India, EV with 3kWh battery India, OTA updates electric scooter, Bengaluru EV startup Numeros