கனடாவில் காலியாக இருக்கும் ஏராளமான பணியிடங்கள்: வெளிநாட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பு
கனேடியர்கள் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள்.
அதற்குக் காரணம் என்ன?
கனடாவில் பெருமளவில் பணியிடங்கள் காலியாக உள்ள அதே நேரத்தில், அங்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் உள்ளது.
அதாவது, அதிக அளவில் காலியிடங்கள் உள்ளன, ஆனால், அந்த வேலைகளுக்கேற்ற தகுதியுடையவர்கள் குறைவாகவே உள்ளார்கள். சரியாகச் சொன்னால், தகுதியுடையவர்கள் ஏற்கனவே சரியான வேலைகளில் இருப்பதால், இந்த காலியிடங்களை நிரப்ப ஆளில்லை.
ஆகவேதான், கனேடிய நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை அதிக அளவில் வேலைக்கு எடுக்கிறார்கள்.
இப்போதைய சூழலிலும், பல துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், அவறை நிரப்பும் அளவுக்கு கனடாவில் பணியாளர்கள் இல்லை. ஆக, வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுப்பது இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகிறது.
ஆனால், வெளிநாட்டவர்கள் கனடாவில் சட்டப்படி வேலை செய்யவேண்டுமானால், அதற்காக அவர்கள் பணி உரிமம் பெறவேண்டும். சில இடங்களில் பணி வழங்குவோர் தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு ஒன்றை (Labour Market Impact Assessment - LMIA) செய்யவேண்டியிருக்கும்.
எப்படியும், கனடாவில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு அந்த காலியிடங்களை நிரப்ப ஆட்களும் இல்லை என்னும் பட்சத்தில், அது தகுதியான வெளிநாட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்திதானே!