குளிச்சு 3 நாள் ஆச்சு! தாலிபான்கள் சுத்திகிட்ட இருக்காங்க... அங்கு சிக்கிய பிரபல நடிகை தங்கையின் கணவர் கண்ணீர்
ஆப்கானிஸ்தானுக்கு வியாபாரம் செய்ய சென்ற பிரபல நடிகை தங்கையின் கணவர் சிக்கிக் கொண்டதால், அவர் தன் குடும்பத்தினருக்கு போனில் கதறி அழுதுள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால், அங்கிருக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையை சேர்ந்த நடிகை நுபூர் அலங்காரின் சகோதரி ஜிக்யாசா என்பவரின் கணவர் கவுசல் அகர்வால் (50) ஆப்கானில் சிக்கியுள்ளார்.
இவர் கடந்த ஜூலை 16-ஆம் திகதி வியாபாரம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார். அதன் பின் கடந்த 15-ஆம் திகதி இந்தியா திரும்ப திட்டமிட்ட நிலையில், அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது அங்கிருந்து தப்பி இந்தியா திரும்ப முடியாத நிலையில் அவர் அங்கிருக்கும் கந்தகார் நகரில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர் குடும்பத்தினரிடம் கூறுகையில், கந்தகாரில் உள்ள நண்பரின் அலுவலகத்தில் வசித்து வருகிறேன். தினமும் 3 மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
தண்ணீர் விநியோகம் இல்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிக்கிறோம் . மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து மொபைல் நெட்வொர்க்கும் தடை செய்யப்படுகிறது.
இதற்கு இடைபட்ட நேரத்தில்தான் பேச முடியும். தலிபான்கள் கந்தகார் தெருக்களில் ரோந்து சென்றவண்ணம் உள்ளதாகவும், தன்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றும் படி வேதனையுடன் கூறியுள்ளார்.