வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த இந்தியர்: ஊர் மக்கள் கூடி மணமக்களுக்கு வாழ்த்து
இந்தியாவின் நூர்பூரில் உள்ள ரமேஷ் ராஜ் என்ற இளைஞர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரிஜிட் என்ற இளம்பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பெண்ணுடன் திருமணம்
இந்தியாவின் நூர்பூரில் உள்ள பஞ்சாரா கிராம பஞ்சாயத்தின் கானோஹ் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ராஜ் என்ற இளைஞர் அவுஸ்திரேலிய பெண்ணான பிரிஜிட்டை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கனோஹ் கிராமத்தில் மணமகளின் தாய் கேப்ரியல் மற்றும் சகோதரர் ரோமன் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
மணப்பெண் பிரிஜிட், இந்திய திருமண ஆடைகளை அணிந்து, விழாவின் போது ஒவ்வொரு உள்ளூர் வழக்கத்திலும் பங்கேற்றார்.
அவுஸ்திரேலியாவுக்கு குடியேறிய குடும்பம்
ரமேஷ் ராஜ் குடும்பம் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சொந்த கிராமத்திற்குச் செல்வதாகவும் மணமகனின் தந்தை தேஸ் ராஜ் கவுண்டல் கூறினார்.
மணமகன் ரமேஷ் வியன்னாவில் தனியார் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில், மணமகள் பிரிஜிட் உடன் பணிபுரிந்துள்ளார்.
பிரிஜிட்டின் தோழி ஒருவர் ரமேஷை அவளுக்கு அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
மணப்பெண்ணின் தந்தை லியோனார்ட் ரிச்சர்ட்ஸ் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அவரது தாயும் சகோதரரும் மணமகனின் கிராமத்திற்கு திருமணத்தை நடத்த வந்தனர்.