பிரித்தானிய மருத்துவமனையில் புதிதாக பிறந்த 8 குழந்தைகளை கொன்ற செவிலியர்: விசாரணையில் 18-வது முறையாக சொல்லும் பதில்
பிரித்தானியாவில் மருத்துவமனை ஒன்றில் 8 குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவிலியர், தற்போது 18-வது முறையாக தனது குற்றத்தை மறுத்துள்ளார்.
இங்கிலாந்தின் செஸ்டர் மருத்துவமனையில் 'பிறந்த குழந்தைகள்' பிரிவில் செவிலியராக சேவை செய்தவர் லூசி லெட்பி (Lucy Letby).
தற்போது 31 வயதாகும் இவர், 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அதே மருத்துவமனையில் 5 ஆன் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 8 உதித்தாக பிறந்த குழந்தைங்களை கொலை செய்ததாக குற்றம் சட்டப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அதே காலகட்டத்தில் 5 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆன் குழந்தைகள் என 10 குழந்தைகளை கொள்ள முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
2015-2016க்கு இடையில் சந்தேககிக்கும் வகையில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில், விசாரணை மேற்கொண்டதையடுத்து லெட்பி முதன்முதலில் செஷயர் காவல்துறையால் 2018-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், லூசி மீதான இந்த வழக்கு இன்று 18-வது முறையாக நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த முறையும் அவர் தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை ஏற்க மறுத்துள்ளார்.
செஸ்டர் பல்கலைக்கழக பட்டதாரியான லூசி லெட்பி, ஒரு காலத்தில் 3 மில்லியன் பவுண்டுகள் நிதி திரட்டும் பிரச்சாரத்தின் முகமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
