பிரித்தானிய செவிலியர் லூசி லெட்பி மீதான வழக்கு: குற்றத்தை உறுதிப்படுத்திய தீர்ப்பு
பிரித்தானிய மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை முயன்ற செவிலியர் லூசி லெட்பி குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
செவிலியர் லூசி லெட்பி குற்றவாளி
பிரித்தானிய மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் லூசி லெட்பி மீதான மறு விசாரணையில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் நடந்த மறு விசாரணையில், 34 வயதான செவிலியர் லூசி லெட்பி குறைந்த மாதங்களில் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
இது, கவுன்டெஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில்(Countess of Chester Hospital) 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை ஏழு குழந்தைகளைக் கொலை செய்தது மற்றும் ஆறு குழந்தைகளைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் லூசி லெட்பிக்கு எதிரான தீர்ப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வருகிறது.
குழந்தை K
குழந்தை K என்றழைக்கப்படும் இந்த வழக்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன்பே பிறந்த குழந்தையை கொலை முயற்சி செய்வது தொடர்பானது.
வழக்குத் தொடுநர்கள் லூசி லெட்பி குழந்தையின் சுவாசக் குழாயை வேண்டுமென்றே கழற்றிவிட்டதாக வாதிட்டனர்.
குழந்தை மருத்துவ நிபுணர் ஒருவர் லூசி லெட்பியை "கையும் களவுமாக" பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தை துர்திஷ்டவசமாக 3 நாட்கள் கழித்து உயிரிழந்து இருந்தாலும், இது லூசி லெட்பியின் செயல்களின் விளைவுகளால் அல்ல என்று CPS (Crown Prosecution Service) தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் மேலும் பல பரிமாணங்களை சேர்க்கிறது.
இதன் மூலம் லூசி லெட்பி பிரித்தானிய வரலாற்றில் கொடூரமான தொடர் கொலைகாரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |