குழந்தையிடம் மோசமாக நடந்துகொண்ட ஆசிரியை: ரகசிய கமெராவில் சிக்கிய காட்சி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பள்ளிக்குச் சென்ற முதல் நாளே, மூன்று வயது சிறுமி ஒருத்தி மோசமான அனுபவம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்தது.
குழந்தையிடம் மோசமாக நடந்துகொண்ட ஆசிரியை
நர்சரியில் படிக்கும் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென ஆசிரியர்களுக்கு இப்போதெல்லாம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
Credit: X
என்றாலும், பள்ளிக்கு வந்த முதல் நாளே, மூன்று வயது சிறுமி ஒருத்தியைத் தாக்கியுள்ளார் ஆசிரியை ஒருவர்.
குழந்தையை அந்த ஆசிரியை அடித்ததில், அந்தக் குழந்தை கீழே விழுந்திருக்கிறாள். அவள் கீழே விழுந்து அம்மா, அம்மா என கதறியும், அந்த ஆசிரியை அந்தக் குழந்தையைப் பார்த்து தொடர்ந்து சத்தமிட்டுள்ளார்.
Credit: X/@EdbergVanessa
ரகசிய கமெராவில் சிக்கிய காட்சி
இந்தக் காட்சியை, மற்றொரு குழந்தையின் தாயாகிய ஒரு பெண் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
Credit: X/@EdbergVanessa
அந்த காட்சிகளை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள அந்தக் குழந்தையின் சட்டத்தரணி, அது குழந்தையை கண்டிப்பதற்காக அடிப்பது கூட அல்ல, அது தாக்குதல் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Credit: X/@EdbergVanessa
விடயம் வெளியானதும் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டாராம் அந்த ஆசிரியை.
என்றாலும், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.
பிரான்சில், 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைத் தாக்குவது, சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |