போலியாக பீல்டிங் செய்த கோலி! விதியை மீறியதாக வங்கதேச வீரர் குற்றச்சாட்டு.. வைரலாகும் வீடியோ
ஐசிசி விதியை மீறி நடந்துகொண்ட இந்திய வீரர் விராட் கோலி
கோலியின் செயலுக்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும் என வருத்தத்துடன் கூறிய வங்கதேச வீரர்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி போலியாக பீல்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அடிலெய்டில் நேற்று நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, 7வது ஓவரில் லித்தன் தாஸ் அடித்த பந்தை அர்ஷ்தீப் சிங் த்ரோ செய்தார்.
அப்போது இடையில் நின்றிருந்த விராட் கோலி, பந்தை பிடித்து த்ரோ செய்வது போல் நடித்தார். கோலியின் இந்த செயலை நடுவர்கள் கவனிக்கவில்லை. வங்கதேச துடுப்பாட்ட வீரர்களும் அதனை சுட்டிக்காட்டவில்லை.
ஆனால், கிரிக்கெட் விதி 41.5-ன் படி கோலி செய்தது தவறாகும். அதாவது வேண்டுமென்றே கவனச் சிதறல் செய்வது, ஏமாற்றுதல் அல்லது துடுப்பாட்ட வீரர் தடுத்தல் ஆகியவை இந்த விதியின் கீழ் வரும்.
so, even if this did happen, none of the batsmen from bangladesh appealed for this fake fielding ?#FakeFielding #NoBall #ViratKohli? #INDvsBAN #T20WorldCup #Cheating #SuryakumarYadav #KLRahul? #RohitSharma? #TeamIndia pic.twitter.com/Zl1qGNIto3
— mayank ranjan (@theranjanmayank) November 3, 2022
வீரர் ஒருவர் போலியாக பீல்டிங் செய்தால் எதிரணி கூடுதலாக 5 ஓட்டங்கள் வழங்க வேண்டும். அத்துடன் அப்போது வீசப்பட்ட பந்து Dead ball என்று அறிவிக்க வேண்டும்.
நேற்றைய போட்டியில் விதியின்படி நடந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். ஏனென்றால் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், வங்கதேச வீரர் நூருல் ஹசன் இதுகுறித்து கூறுகையில், 'அது ஈரமான மைதானம் என்பதை அனைவரும் பார்த்தோம். இறுதியில், இந்த விடயங்களைப் பற்றி பேசும்போது, போலியாக த்ரோ செய்வதும் நடந்தது. ஐந்து ஓட்டங்கள் பெனால்டியாக அதற்கு கொடுத்திருக்க வேண்டும். அதுவும் எங்கள் வழியில் சென்றிருக்கலாம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது கூட நடக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கோலி போலியாக த்ரோ செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.