லண்டன் விமான பயணத்தில் இறந்துவிடுவோமோ என பயந்த பெண்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்..என்ன நடந்தது?
அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு திரும்பிய விமான பயணத்தில், பெண்ணொருவர் நட்ஸ் உணவால் இறந்துவிடுவோமோ என பயந்த விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
நட்ஸ் ஒவ்வாமை
ஜோசி நார்த் (Josie North) என்ற 28 வயது பெண், கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் பயணித்துள்ளார்.
அதற்கு முன்பாக அவர் விமான நிறுவனத்தின் உதவி மையத்தை தொடர்பு கொண்டு, தனக்கு நட்ஸ் ஒவ்வாமை இருப்பதாக கூற முயன்றுள்ளார்.
ஆனால் அவரால் அங்கு செல்ல முடியாத காரணத்தால், ஊழியர்கள் தனது தேவையை அறிந்திருப்பதை உறுதி செய்ய 4 மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ஊழியர் ஒருவர், நட்ஸ்களின் சேர்ப்பு கொண்ட உணவுகள் இருக்காது என்று அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றாலும், உண்மையான நட்ஸ் பொருட்கள் எதுவும் விமானத்தில் இருக்காது என்று கூறியதால் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
அதன் பின்னர் முதலில் அவருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருப்பதாக பயணிகளுக்கு கூறப்பட்டு, பின் அனைத்து வகையான நட்ஸ் ஒவ்வாமையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் பலரும்
விமானம் வானில் பறந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு, உணவு அட்டவணையில் சொக்லேட் சிப் பெக்கன் பை இருப்பதைப் பார்த்து ஜோசி நார்த் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், அதனை தன்னைச் சுற்றி இருக்கும் பலரும் ஒரே நேரத்தில் அதனை சாப்பிட்டால் தான் இறக்க வாய்ப்பு இருந்ததாக அவர் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது குறித்து உதவியாளருடன் தகராறில் ஈடுபட்ட காட்சிகளை அவர் டிக்டோக் கணக்கில் பகிர்ந்தார். அத்துடன் கேப்டனுடன் அவர் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக், இந்நிகழ்வு குறித்து விசாரணையைத் தொடங்கி நார்த்திடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |