சர்க்கரை பொங்கலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
தென்னிந்திய பண்டிகைகளில் பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல்.
கோவில்களில் நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
சுவையை போலவே சர்க்கரை பொங்கலில் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
என்னென்ன ஊட்டச்சத்துக்கள்
பச்சரிசியில் கால்சியம், மெக்னீசியம். பாஸ்பரஸ், பொட்டாசியம். இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் ஏ. பி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
பாசிபருப்பில் இருக்கும் புரதசத்து உடலை குளிர்ச்சிப்படுத்தும், பொட்டாசியம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேலும் பாசிபருப்பில் மெக்னீசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்களும் பாசிப்பருப்பில் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
வெல்லத்தில் வைட்மின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை உடலின் சருமம் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டமளிக்கும்.
மேலும் வெல்லம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும்.
சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. வைட்டமின் ஏ. ஈ போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன.
முந்திரி, திராட்சை போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை.
வாசத்திற்காக சேர்க்கப்படும் ஏலக்காயில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
பண்டிகை காலத்தில் விரதத்தை முடித்தவர்கள் சர்க்கரை பொங்கலை சாப்பிடும்போது அவர்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும்.
அதனால் தான் ஒவ்வொரு விசேஷத்திலும் சர்க்கரைப் பொங்கல் பிரதான உணவாக இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |