அசைவ உணவை விட அதிக ஊட்டச்சத்துக்கள்.., பருப்பில் இருக்கும் பல்வேறு நன்மைகள்
முட்டை, இறைச்சி அல்லது மீன் ஆகிய அசைவ உணவுகளை விட அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
பருப்பின் நன்மைகள்
பொதுவாக நாம் எல்லோரும் உடலை சமநிலையாக வைத்திருக்க பல உணவுகளை தேர்ந்தெடுத்து உண்போம். முக்கியமாக அதிக புரதம் நிறைந்த அசைவ உணவுகளை பலரும் நாடுவார்கள்.
ஆனால், சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவை சாப்பிடுவது கடினமான ஒன்று. இப்போது நாம் அசைவ உணவை விட அதிக வலிமையையும், புரதத்தை கொண்டுள்ள சைவ உணவு பொருளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அந்த உணவு பொருள் தான் பருப்பு. இதில், முட்டை, இறைச்சி அல்லது மீனை விட அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஆயுஷ் மருத்துவத் துறையில் 15 வருட அனுபவமுள்ள ரேபரேலியைச் சேர்ந்த ஆயுஷ் மருத்துவரான டாக்டர் அகன்க்ஷா தீட்சித் கூறுகையில், "பருப்பு வகைகளில் புரதம் நிறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
நாம் பருப்பை உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை பெறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
பொதுவாகவே நமக்கு புரதம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கோழி, ஆட்டிறைச்சி, முட்டை மற்றும் மீன் தான். ஆனால், சைவ பிரியர்கள் அதற்கு பதிலாக பருப்பை எடுத்துக் கொள்ளலாம்.
நமது உடலின் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படும் புரதமானது பருப்பில் உள்ளது. இது தவிர, பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின் பி6, மெக்னீசியம், ஃபோலேட் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் பருப்பில் காணப்படுகின்றன.
இதனால், புரதத்தின் சக்தி மையம் என்றும் பருப்பு அழைக்கப்படுகிறது. தோலுடன் கூடிய கருப்பு பயறு, சிவப்பு பயறு ஆகிய இரண்டு வகைகளில் பருப்பு கிடைக்கிறது. இது, பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
பருப்பை உட்கொள்வதன் மூலம் செரிமான அமைப்பை வலுப்படுத்துதல், இதயம் தொடர்பான நோய்கள், எடை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துதல் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |