அறிமுக போட்டியில் அரைசதம் விளாசிய இலங்கை வீரர்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமான நுவனிந்து பெர்னாண்டோ அரைசதம் விளாசினார்.
நுவனிந்து பெர்னாண்டோ
இலங்கை-இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.
அறிமுக போட்டியில் அரைசதம்
தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் நுவனிந்து பெர்னாண்டோ களமிறங்கினார். இந்திய அணியின் தாக்குதல் பந்துவீச்சை சமாளித்து சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.
Dream debut for Nuwanidu Fernando ?
— ICC (@ICC) January 12, 2023
Can he make it even more memorable with a big one? ?#INDvSL | ?: https://t.co/q1Pjk60ZeG pic.twitter.com/Oi4CNPd5lC
தான் சந்தித்த 62வது பந்தில் அவர் அரைசதம் அடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த பந்திலேயே ரன் அவுட் ஆனார்.
நுவனிந்து பெர்னாண்டோ 63 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார்.