8 பில்லியன் வரி செலுத்துவது பெருமை, ஏழையாகிவிடுவதே பயம் - Nvidia CEO
Nvidia CEO calls 8 billion dollars tax a privilege: எத்தை பில்லியன் வரியாக செலுத்த தயாராக இருப்பதாக என்வீடியா CEO தெரிவித்துள்ளார்.
பில்லியனர் வரி - Nvidia CEO கருத்து
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முன்மொழியப்பட்ட பில்லியனர் வரி (billionaire tax) குறித்து என்வீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த வரி, ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்டவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கிறது.
ஹுவாங் சொத்து மதிப்பு 184 பில்லியன் டொலர் என்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 பில்லியன் டொலர் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால், அவர் இதை எதிர்க்காமல், “வரி செலுத்துவது ஒரு பெருமை, பொறுப்பு” எனக் கூறியுள்ளார். “ஐந்து ஆண்டுகளில் 8 பில்லியன் டொலர் வரி செலுத்த முடிவது எனக்கு ஒரு வாய்ப்பு. அதைவிட அதிகம் செலுத்தினாலும் மகிழ்ச்சி தான்” என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் நகைச்சுவையாக, “நான் வரி செலுத்துவதற்கு பயப்படவில்லை, ஏழையாகிவிடக் கூடாது என்பதே எனக்கு பயம்” என கூறினார்.
ஹுவாங் தனது வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூர்ந்தார். டென்னிஸ் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்த காலத்திலிருந்து, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் CEO-ஆக உயர்ந்ததைக் கூறினார்.
வெளியேறும் பில்லியனர்கள் மீது விமர்சனம்
மேலும், கலிபோர்னியாவை விட்டு வெளியேறும் பில்லியனர்களை அவர் விமர்சித்துள்ளார். “கலிபோர்னியாவை விட்டு செல்ல வேண்டாம். வரி அதிகம் தான், ஆனால் வானிலை சிறப்பாக உள்ளது. தொழில்நுட்ப வாய்ப்புகள் இங்கே அதிகம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாறாக, கூகுள் நிறுவுநர்கள் செர்கே பிரின், லாரி பேஜ், முதலீட்டாளர் பீட்டர் தியல் போன்றோர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஹுவாங், கலிபோர்னியாவின் புதுமையான சூழல், திறமையான மனித வளம் ஆகியவை வரி சுமையை விட முக்கியமானவை எனக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |