ஆறு நாட்களில் ரூ.42,00,000 கோடி சம்பாதித்த நிறுவனம்., அம்பானியின் மொத்த சொத்து மதிப்பை விட அதிகம்
வெறும் ஆறே நாட்களில் இலங்கை பிணமதிப்பில் சுமார் ரூ. 42,00,000 கோடியை அமெரிக்க நிறுவனமொன்று சம்பாதித்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்ப்போம்.
AI Chipஐ தயாரிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Nvidia Corp மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகளில் பெரும் உயர்வு ஏற்பட்டது, புதிய ஆண்டிலும் (2024) இந்தப் போக்கு தொடர்கிறது.
இந்த ஆண்டின் முதல் ஆறு நாட்களில் அதன் சந்தை மதிப்பு $130 பில்லியன் அதிகரித்துள்ளது. இது இலங்கை பிணமதிப்பில் சுமார் ரூ. 42,00,000 கோடி ஆகும்.
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி சொத்து மதிப்பை விட அதிகம்
இது இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர்களான Mukesh Ambani மற்றும் Gautam Adaniயின் சொத்து மதிப்பை விட சுமார் 35 பில்லியன் டொலர் அதிகம்.
அக்டோபர் 2022-ன் மிகக் குறைந்த நிலைக்குப் பிறகு, இது 400 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் இந்த காலகட்டத்தில் அதன் சந்தை மூலதனம் ஒரு Trillion Dollar அதிகரித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதன் சந்தை மதிப்பு முதல் முறையாக 1 Trillion Dollarகளை எட்டியது. இன்று 1.312 Trillion Dollar சந்தை மூலதனத்துடன் உலகின் ஆறாவது பாரிய நிறுவனமாக உள்ளது.
இதன் MarketCap மார்க் ஜுக்கர்பெர்க்கின் Meta Platforms, எலோன் மஸ்க்கின் Tesla மற்றும் வாரன் பஃபெட்டின் Berkshire Hathaway ஆகிய நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது.
This is truly incredible:
— The Kobeissi Letter (@KobeissiLetter) January 9, 2024
Nvidia, $NVDA, has already added another $130 billion of market cap in 2024 and we're only 6 trading days in.
Since its low in October 2022, $NVDA has officially added $1 TRILLION in market cap.
As of today, the stock is officially up 400% from its… pic.twitter.com/A8XieeJFao
Nvidia நிறுவனர் Jensen Huang
Nvidia தைவானில் பிறந்த Jensen Huang என்பவரால் 1993-ல் நிறுவப்பட்டது. என்விடியாவில் அவருக்கு 3.5 சதவீத பங்குகள் உள்ளன.
Jensen Huang1963ல் தைவானில் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் தைவான் மற்றும் தாய்லாந்தில் கழிந்தது. 1973ல், அவரது பெற்றோர் அவரை அமெரிக்காவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு அனுப்பினர்.
சில நாட்கள் கழித்து அவரும் அமெரிக்கா சென்றார். Nvidia ஏப்ரல் 1993-ல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிறுவனம் வீடியோ கேம் கிராபிக்ஸ் சிப்களை தயாரித்தது. நிறுவனத்தின் பங்கு 100 டொலரை எட்டியதும், Huang தனது கையில் நிறுவனத்தின் லோகோவை பச்சை குத்திக்கொண்டார்.
Huang 47.2 Billion Dollar சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 26வது இடத்தில் உள்ளார்.
Nvidia பங்குகள் ஏன் உயர்கின்றன?
கொரோனா காலத்தில் இந்நிறுவனத்தின் பங்குகளில் பெரும் உயர்வு ஏற்பட்டது. Crypto ஏற்றம் காரணமாக, அதன் சுரங்கத்தில் சில்லுகளின் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை மூன்றில் இரண்டு பங்கு சரிந்தது.
இப்போது, AI-ன் அதிகரித்து வரும் போக்கால், நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன. Microsoft மற்றும் Google போன்ற பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடையே Nvidiaவிடமிருந்து அதிகமான சிப்களைப் பெறுவதற்கு போட்டி நிலவுகிறது.
வீடு வீடாக சென்று புடவை விற்றவர்., இன்று சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடி-கவுதம் அதானி கடந்து வந்த பாதை
அது தவிர, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்து ஆயிரக்கணக்கான சிப்களை வாங்குகின்றன. இதுமட்டுமின்றி சீன நிறுவனங்களான Tencent மற்றும் Alibaba நிறுவனங்களும் என்விடியாவின் வாசலில் நிற்கின்றன.
Chatbot மற்றும் பிற கருவிகளின் அதிகரித்து வரும் போக்கு காரணமாக, நிறுவனத்தின் பங்குகள் வரும் நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Nvidia corp Market Cap, Nvidia adds 130 billion dollar market cap in 6 trading days, Nvidia Jensen Huang, Nvidia technology Company, Gautam Adani, Mukesh Ambani