ட்ரம்ப் சொன்னாலும் முடியாது... ஜென்சன் ஹுவாங் விடயத்தில் Nvidia திட்டவட்டம்
Nvidia says it won’t reinstate Jensen Huang as CEO: ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்போவதில்லை என்று என்விடியா (Nvidia) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சிலிக்கான் வேலியின் பல பெரும்புள்ளிகளிடமிருந்து கடுமையான அழுத்தம் இருந்தபோதிலும், என்விடியாவின் நிர்வாகக் குழு ஜென்சன் ஹுவாங்கை தலைமைச் செயல் அதிகாரியாக மீண்டும் நியமிக்கத் திட்டமிடவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளது.
விசாரணையில் கவனம்
மாறாக, சந்தேகத்திற்குரிய சீன உளவாளி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட ஹுவாங் மீது விசாரணை தொடங்குவதில் நிர்வாகம் கவனம் செலுத்தும் என்ற தகவல் கசிந்துள்ளது.

ஹுவாங் தேசியப் பாதுகாப்பையோ அல்லது என்விடியாவின் இரகசியங்களையோ மீறினாரா என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த விசாரணையை வழிநடத்த, என்விடியா நிறுவனம் வாட்செல் லிப்டன் சட்ட நிறுவனத்தை நியமித்துள்ளது.
ஹுவாங் கடந்த வாரம் என்விடியா நிறுவனத்திலிருந்து விலகினார்; அவர் திருமணத்திற்கு அப்பாற்பட்ட குறைந்தது மூன்று உறவுகளில் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் இரண்டு உறவுகள் என்விடியா (Nvidia) நிறுவன ஊழியர்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பதவியிழந்த தலைமைச் செயல் அதிகாரி, நிறுவனத்திற்குத் திரும்புவது குறித்து விவாதித்ததாக ஃபைனான்சியல் டைம்ஸ் வார இறுதியில் செய்தி வெளியிட்டது; ஆனால், அந்த யோசனையை பரிசீலிப்பதில் என்விடியா நிர்வாகக் குழுவுக்கு ஆர்வம் இல்லை என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஹுவாங்கின் ஆதரவாளர்கள் அவர் மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக திரும்ப வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; எலான் மஸ்க் மற்றும் ட்ரம்ப் போன்றவர்களும் இதற்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.

அவரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி இணையவழியில் கையெழுத்திட்ட 180,000-க்கும் மேற்பட்டவர்களில் மஸ்க்கும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
ஹுவாங் மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) வருவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்பதை ட்ரம்ப் வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார். திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஹுவாங் விடயத்தில் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை, நமது நாடு தற்போது முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது என்று கூறினார்.
தொழில்நுட்ப ஜாம்பவான்கள்
இதனிடையே, ஹுவாங்கிற்குப் பதிலாக ஒருவரைக் கண்டறிவதற்காக, ஒரு உயர் அதிகாரியைத் தேடும் நிறுவனத்தை நாடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக என்விடியாவின் நிர்வாகக் குழு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

33 ஆண்டுகளுக்கு முன்பு ஹுவாங் இணைந்து நிறுவிய என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காக, அவரது ஆதரவாளர்கள் ஒரு மாபெரும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த முயற்சிக்கு உதவுமாறு கோரி, என்விடியா ஊழியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை ரெப்லிட் தலைமை நிர்வாக அதிகாரி அம்ஜத் மசாத்துக்கு அவசரச் செய்தி அனுப்பியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
உபெர் இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக், எபிக் கேம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஸ்வீனி, ஒய் காம்பினேட்டர் தலைமை நிர்வாக அதிகாரி கேரி டான் மற்றும் ஷாப்பிஃபை தலைமை நிர்வாக அதிகாரி டோபியாஸ் லூட்கே உள்ளிட்ட பல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஹுவாங் ஆதரவு மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஹுவாங்கால் முன்னெடுக்கப்பட்டதாகக் கருதபப்டும் நிறுவனத்தின் அதீத செலவினப் பழக்கங்களை, என்விடியாவின் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரி கோலெட் கிரெஸ் தடுத்து நிறுத்த உள்ளார்.
ஹுவாங் தலைமையின் கீழ், நூற்றுக்கணக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு என்விடியா (Nvidia) முதன்மை நிதி ஆதரவாளராகச் செயல்பட்டது.
ஹுவாங் அந்த நிறுவனத்தைத் தனது விருப்பப்படி பணம் செலவிடக்கூடிய ஒரு கணக்கு போலக் கையாண்டார் என்றும், அவரது மிகப்பெரிய ஒப்பந்தங்கள் சிலவற்றைக் குறித்து கிரெஸ் அடிக்கடி கேள்வி எழுப்பினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.