பந்துவீச்சில் கெத்து காட்டும் வங்கதேசம்! 180 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து
டாக்காவில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 180 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
வங்கதேசம் 172
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் டெவோன் கான்வே (Devon Conway) 11 ஓட்டங்களில் மெஹிடி ஹசன் ஓவரில் போல்டு ஆனார்.
பின்னர் மற்றொரு தொடக்க வீரரான டாம் லாதமை 4 ஓட்டங்களில் டைஜுல் இஸ்லாம் வெளியேற்றினார். அடுத்து நிக்கோல்ஸ் (1), கேன் வில்லியம்சன் (13), பிளெண்டல் (0) என நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
Twitter (Blackcaps)
அதிரடி அரைசதம் விளாசிய பிலிப்ஸ்
ஆனாலும், கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். எனினும் வங்கதேச பந்துவீச்சாளர்கள் மிரட்டலான பந்துவீச்சினால் ஏனைய விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் நியூசிலாந்து அணி 180 ஓட்டங்களுக்கு சுருண்டது.
Twitter (Blackcaps)
அதிகபட்சமாக பிலிப்ஸ் 72 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள் விளாசினார். வங்கதேச அணியின் தரப்பில் மெஹிடி ஹசன் மிராஸ், டைஜுல் இஸ்லாம் தலா 3 விக்கெட்டுகளும், ஷோரிபுல் இஸ்லாம் மற்றும் நயீம் ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (@BCBtigers)
நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன் வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |