இரண்டாவது டெஸ்டில் வெகுண்டெழுந்த தென் ஆப்பிரிக்கா! மரண அடி வாங்கிய நியூசிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 211 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ருவன் டி ஸ்வார்ட்
ஹாமில்டனின் Seddon Park மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 242 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ருவன் டி ஸ்வார்ட் 64 ஓட்டங்களும், பெடிங்கம் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
@ProiteasMenCSA
நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரௌர்கே 4 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. டெவன் கான்வே டக்அவுட் ஆகி வெளியேற கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
@Getty Images
சுருண்ட நியூசிலாந்து
40 ஓட்டங்கள் எடுத்த டாம் லாதம் போல்டாகி வெளியேறினார். அடுத்து டேன் பியேட் ஓவரில் கேன் வில்லியம்சன் 43 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, வான் டோண்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ரச்சின் ரவீந்திரா 29 ஓட்டங்களில் வெளியேற, பியேட் மற்றும் பாட்டர்சனின் மிரட்டலான பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
வில் யங் (36) மற்றும் நீல் வாக்னர் (33) ஓரளவு ஓட்டங்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 211 ஓட்டங்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்காவின் டேன் பியேட் 5 விக்கெட்டுகளும், டேன் பாட்டர்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
@Andrew Cornaga/AP
South Africa put up a strong fight against New Zealand on Day 2 ?#WTC25 #NZvSA pic.twitter.com/URTYfBqolM
— ICC (@ICC) February 14, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |