இங்கிலாந்து மண்ணிலேயே சுழன்றடித்த நியூசிலாந்து! அடித்து துவைத்த மிட்செல்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 553 ஓட்டங்கள் குவித்தது.
நாட்டிங்காமின் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. கேப்டன் லாதம் 26 ஓட்டங்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றோரு தொடக்க வீரர் வில் யங், கான்வே, நிகோல்ஸ் ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த டேரல் மிட்செல்-டாம் ப்ளெண்டல் இணை இங்கிலாந்து அணிக்கு ஆட்டம் காட்டியது. இந்த இணையை பிரிக்க இங்கிலாந்து அணி போராடியது. சதம் விளாசிய டாம் ப்ளெண்டல் 106 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டேரல் மிட்செல்-டாம் ப்ளெண்டல் இணை 234 ஓட்டங்கள் குவித்தது.
New Zealand cross 500! They are the first overseas side to reach the mark in England since Pakistan at The Oval in August 2016 ? #ENGvNZ
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 11, 2022
பின்னர் களமிறங்கிய ப்ரேஸ்வல் 49 ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று ஆடிய மிட்சேல் 190 ஓட்டங்களில் அவுட் ஆகி இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் 4 சிக்ஸர், 23 பவுண்டரிகளை விளாசினார்.
#StatChat | 553 is the team's highest total in England, passing 551/9 dec at Lord's in 1973 ? #ENGvNZ pic.twitter.com/T7joeXyf1e
— BLACKCAPS (@BLACKCAPS) June 11, 2022
இறுதியில் நியூசிலாந்து அணி 553 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் , பிராட், ஸ்டோக்ஸ், லீச் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஓலி போப் 51 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் லீஸ் 34 ஓட்டங்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.