தமிழக வீரரின் மிரட்டல்! பந்துவீச்சு 20 ஓவர்களில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
துல்லியமான பந்துவீச்சு
லக்னோவில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 8 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக சாப்மன், பிரேஸ்வெல் தலா 14 ஓட்டங்கள் எடுத்தனர். ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை எடுத்தனர்.
@BCCI (Twitter)
பந்துவீச்சு கூட்டணி
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஹூடா, குல்தீப் ஆகியோர் தலா 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்களை பறக்கவிட்ட நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Time to bowl in Lucknow. Captain Mitch Santner top scoring with 19* in the batting effort. Follow play LIVE in NZ with @skysportnz. LIVE scoring | https://t.co/6w1aZETWKL #INDvNZ ? = BCCI pic.twitter.com/7B6N6XJCp7
— BLACKCAPS (@BLACKCAPS) January 29, 2023