ஒயிட்வாஷில் இருந்து தப்பிய நியூசிலாந்து! பாகிஸ்தானை சரித்த இருவர்
கராச்சியில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
கடைசி ஒருநாள் போட்டி
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்தது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் 299 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
@BlackCaps (Twitter)
வில் யங் 87 ஓட்டங்களும், கேப்டன் டாம் லாதம் 59 ஓட்டங்களும் விளாசினர். சாப்மேன் 33 பந்துகளில் 43 ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர். ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளும், உஸாமா மிர் மற்றும் ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
@ICC (Twitter)
@ICC (Twitter)
இஃப்திகார் அகமது-அஃஹா சல்மான்
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் (1) மற்றும் முகமது ரிஸ்வான் (9) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஷிப்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரர் ஜமானை 33 ஓட்டங்களில் ரவீந்திரா வெளியேற்றினார். எனினும் அஃஹா சல்மான் மற்றும் இஃப்திகார் அகமது கூட்டணி வெற்றிக்காக போராடியது.
Second successive half-century ?
— Pakistan Cricket (@TheRealPCB) May 7, 2023
A splendid knock from @SalmanAliAgha1 ✨#PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/9nZR7ld3T5
அரைசதம் விளாசிய அஃஹா சல்மான் 57 ஓட்டங்களில் ஷிப்லே பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, மில்னே மற்றும் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
9️⃣4️⃣ not out
— Pakistan Cricket (@TheRealPCB) May 7, 2023
7️⃣2️⃣ deliveries
8️⃣ fours
2️⃣ sixes
One incredible innings from @IftiMania ?#PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/lXQDqz7fVR
ஷிப்லே-ரச்சின் அபார பந்துவீச்சு
இதனால் பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 252 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இறுதிவரை களத்தில் நின்ற இஃப்திகார் அகமது 94 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷிப்லே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஏற்கனவே தொடரை இழந்திருந்த நியூசிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் ஒயிட் வாஷ் ஆவதில் இருந்து தப்பியது. பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஷிப்லே ஆட்டநாயகன் விருதும், பிஹ்கர் ஜமான் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.
@ICC (Twitter)