புயல்வேக பந்தில் தெறித்த ஸ்டம்ப்! மிரண்டு நின்ற துடுப்பாட்ட வீரரின் வீடியோ
வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 44 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்தார்
நியூசிலாந்தின் ஆடம் மில்னே 24 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் எடுத்தது.
கான்வே 64 ஓட்டங்களும், பிலிப்ஸ் 60 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவின் விக்கெட்டை ஆடம் மில்னே கைப்பற்றினார்.
அவரது புயல்வேக பந்துவீச்சில் ஷாண்டோவின் ஸ்டம்ப் சரிந்தது. இதனால் அவர் மிரண்டுபோய் வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்களில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மட்டும் 70 ஓட்டங்கள் எடுக்க, ஏனைய வீரர்கள் சொதப்பியதால் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
Full and straight! Adam Milne strikes with his third ball LIVE in NZ on @sparknzsport ? #NZvBAN pic.twitter.com/326Q4EQOuh
— BLACKCAPS (@BLACKCAPS) October 12, 2022
இதனால் நியூசிலாந்து அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்னே 3 விக்கெட்டுகளையும், சௌதீ மற்றும் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Twitter (@BLACKCAPS)
[