36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் சாதனை! வரலாறு படைத்த நியூசிலாந்து அணி
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி 402
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 402 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 462 ஓட்டங்கள் குவிக்க, நியூசிலாந்து அணிக்கு 107 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Just Jasprit things! ? ?
— BCCI (@BCCI) October 20, 2024
A cracker of a ball and it's a WICKET! ? ?
Live ▶️ https://t.co/8qhNBrrtDF#TeamIndia | #INDvNZ | @Jaspritbumrah93 | @IDFCFIRSTBANK pic.twitter.com/KBsEGXs31J
நான்காம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து களமிறங்கியபோது மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது.
இமாலய வெற்றி
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. அணித்தலைவர் டாம் லாதம் (Tom Latham) ஓட்டங்கள் எடுக்காமல் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கான்வே 17 ஓட்டங்களில் வெளியேற, வில் யங் (Will Young) மற்றும் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) கூட்டணி 28வது ஓவரில் வெற்றியை உறுதி செய்தது.
வில் யங் 48 ஓட்டங்களும், ரவீந்திரா 39 ஓட்டங்களும் எடுக்க, நியூசிலாந்து அணி 110 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |