மிரட்டலான பந்துவீச்சால் சீட்டுக்கட்டாய் சரிந்த நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஸ்போர்ட்பார்க் வெஸ்ட்லைட் மைதானத்தில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் கப்தில் மட்டும் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
கப்தில் 36 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தபோது, நியூசிலாந்து அணி 95 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது களமிறங்கிய நீஷம் அதிரடி காட்டினார். அவருடன் இஷ் சோதியும் அதிரடி காட்ட, நியூசிலாந்து அணி 148 ஓட்டங்கள் சேர்த்தது.
நீஷம் 17 பந்துகளில் 32 ஓட்டங்களும், சோதி 10 பந்துகளில் 19 ஓட்டங்களும் எடுத்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் வான் பீக், ஷரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன் பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து, டிக்னரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களின் விக்கெட்டுகளை பென் சியர்ஸ் வீழ்த்தினார்.
PC: Twitter
ஒருபுறம் பஸ் டி லீடே மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இறுதிவரை போராடிய அவர் 53 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசி கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
நெதர்லாந்து 19.3 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதன் மூலம், நியுசிலாந்து அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், பென் சியர்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும்
கடைசி போட்டி இன்று இதே மைதானத்தில் நடக்கிறது.
Blair Tickner (4-27) and Ben Sears (3-22) with career best T20I figures to help the team defend at @VoorburgCC against @KNCBcricket. Scorecard | https://t.co/7QMPYm0YHO #NEDvNZ pic.twitter.com/gdoJ7PYD5y
— BLACKCAPS (@BLACKCAPS) August 4, 2022