பாகிஸ்தானை வாஷ்அவுட் செய்த நியூசிலாந்து அணி! சிக்ஸர் மழையில் மிரட்டல் வெற்றி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
பிரேஸ்வெல் விளாசல்
பே ஓவலில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மோசமான வானிலை காரணமாக 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக அறிவிக்கப்பட்டது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 42 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில் 6 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 59 ஓட்டங்கள் விளாசினார்.
ரஹைஸ் மரியு 58 (43) ஓட்டங்களும், டேர்ல் மிட்செல் 43 (53) ஓட்டங்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 31 (40) ஓட்டங்களும் எடுத்தனர். அகிஃப் ஜாவேத் 4 விக்கெட்டுகளும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளும், அஷ்ரப் மற்றும் முகீம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் தோல்வி
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் 33 ஓட்டங்களும், உஸ்மான் கான் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் நிதானமாக ஆடிய பாபர் அஸாம் அரைசதம் விளாசினார். அவர் 58 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
.@babarazam258 has to depart after his well-constructed 37th ODI fifty 🏏#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/xrPqKHc2bN
— Pakistan Cricket (@TheRealPCB) April 5, 2025
அணித்தலைவர் முகமது ரிஸ்வான் 37 ஓட்டங்களில் வெளியேற, பென் சியர்ஸின் தாக்குதல் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அந்த அணி 40 ஓவரில் 221 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பென் சியர்ஸ் (Ben Sears) 5 விக்கெட்டுகளும், டுஃபி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றி, பாகிஸ்தான் அணியை வாஷ் அவுட் செய்தது. ஆட்ட நாயகன் விருதை பென் சியர்ஸும், மைக்கேல் பிரேஸ்வெல் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
Ben Sears with a second successive five-wicket haul 🙌#NZvPAK 📝: https://t.co/PvzafAZEFH pic.twitter.com/FKM5dHo8TM
— ICC (@ICC) April 5, 2025
A series sweep to end the 24/25 New Zealand Summer of Cricket! Ben Sears leading the charge again with successive five-wicket bags and career-best ODI figures (5-34). Catch-up on all scores | https://t.co/fwZlrRKJKE 📲 #NZvPAK #CricketNation pic.twitter.com/C410af5x9A
— BLACKCAPS (@BLACKCAPS) April 5, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |