படுதோல்வியிலும் முதல் அரைசதம் விளாசிய இருவர்: தொடரை இழந்த பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹமில்டனில் நடந்த ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 292 ஓட்டங்கள் குவித்தது.
மிட்செல் ஹே ஆட்டமிழக்காமல் 78 பந்துகளில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 99 ஓட்டங்கள் விளாசினார். முகமது அப்பாஸ் 41 (66) ஓட்டங்களும், நிக் கெல்லி 31 (23) ஓட்டங்களும் எடுத்தனர். முகமது வாசிம், சுஃபியான் முஃகீம் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் ஃபஹீம் அஷ்ராப் (Faheem Ashraf) நிலைத்து நின்று ஆடி வெற்றிக்காக போராடினார்.
Maiden ODI fifty for @iFaheemAshraf 🏏#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/Co6YhLIHb3
— Pakistan Cricket (@TheRealPCB) April 2, 2025
அவருடன் கைகோர்த்த பந்துவீச்சாளர் நசீம் ஷா அதிரடி காட்டினார். முதல் அரைசதம் அடித்த அஷ்ராப் 80 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேபோல் முதல் நசீம் ஷாவும் அரைசதம் விளாசினார். 42வது ஓவரில் அவர் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியடைந்தது.
நசீம் ஷா (Naseem Shah) 44 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார். பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜேக்கப் டுப்பி 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
Coming in as a concussion substitute, @iNaseemShah hit his maiden ODI half-century off just 41 balls 👌#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/dzcm8QJ4hC
— Pakistan Cricket (@TheRealPCB) April 2, 2025
ODI series secured in Hamilton! A maiden ODI five-wicket bag for Ben Sears (5-59) and career-best ODI figures for Jacob Duffy (3-35) helps bowl out the visitors for 208. Catch-up on all scores | https://t.co/6hz577JnyD 📲 #NZvPAK #CricketNation pic.twitter.com/mRi2TOYyr1
— BLACKCAPS (@BLACKCAPS) April 2, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |