ஆறு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி! பாகிஸ்தானை அடித்து துவைத்த வீரர்
பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் மட்டுமே நியூசிலாந்தின் விக்கெட்டை கைப்பற்றினார்
நான்கு ஓவர்கள் வீசி 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கிரிஸ்ட்சர்ச்சில் நடந்த 4வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக இப்திகார் அகமது 27 ஓட்டங்களும், ஆசிஃப் அலி 25 ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சௌதீ, சான்ட்னர் மற்றும் பிரேஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
A fifth six to bring up his 2nd T20I fifty, Finn Allen ? #NZvPAK pic.twitter.com/kW2Iflm0xY
— BLACKCAPS (@BLACKCAPS) October 11, 2022
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் பிஃன் ஆலன் வாணவேடிக்கை காட்டினார். 6 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர், 42 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார்.
கான்வே 49 ஓட்டங்கள் எடுத்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் மூலம் நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
New Zealand build momentum heading into the #T20WorldCup ?#NZvPAK | Scorecard: https://t.co/7M2lCaPWQt pic.twitter.com/uBWoM63rOW
— ICC (@ICC) October 11, 2022