கடைசி வரை போராடிய தசுன் ஷனகா.. நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை
104 ஓட்டங்கள் விளாசிய நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை நவம்பர் 1ஆம் திகதி எதிர்கொள்கிறது
சிட்னியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம் விளாசியதன் மூலம் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் ரஜிதா 2 விக்கெட்டுகளையும், தீக்ஷனா, ஹசரங்கா, லஹிரு குமார மற்றும் தனஞ்சய டி சில்வா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. போல்ட், சௌதீயின் மிரட்டலான பந்துவீச்சினால் இலங்கை அணி 8 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
NZ set a target of 168!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 29, 2022
Let's do it Lions!?#SLvNZ #RoaringForGlory #t20worldcup pic.twitter.com/WfLaP9lI88
எனினும் பானுக ராஜபக்ச அதிரடியாக 22 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வீரர்கள் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
Sri Lanka lose half the side with 24 runs on board ?#T20WorldCup | #NZvSL | ?: https://t.co/7YevVnQdfG pic.twitter.com/5zkHbRSB7J
— ICC (@ICC) October 29, 2022
ஆனால் கடைசி வரை போராடிய கேப்டன் ஷனகா 35 ஓட்டங்கள் எடுத்து 9வது விக்கெட்டாக அவுட் ஆனார். 20வது ஓவரில் லஹிரு குமார ஆட்டமிழக்க, இலங்கையின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதனால் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், சான்ட்னர் மற்றும் சோதி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Points in the bank! Trent Boult leads the bowling effort with 4-13 at the @scg to defend against @OfficialSLC. Wickets also for Santner, Sodhi, Southee and Ferguson. Card | https://t.co/evB7YxqHcD #T20WorldCup pic.twitter.com/pFnJPFzFK6
— BLACKCAPS (@BLACKCAPS) October 29, 2022
Defeat in Sydney ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 29, 2022
NZ won by 65 runs.#SLvNZ #RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/30MDbqeutw