வீணான கமிந்து மெண்டிஸின் போராட்டம்! நியூஸிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
நியூசிலாந்து 255
ஹாமில்டனில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதின.
மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க முதலில் தாமதமானது. பின்னர் மழை நின்ற பின் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய நியூசிலாந்து (New Zealand) அணி ரச்சின் ரவீந்திரா (79), மார்க் சாப்மேன் (62) ஆகியோரின் அரைசதத்தால் 255 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி சீட்டுக்கட்டுபோல் விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) தனியாளாக நின்று வெற்றிக்காக போராடினார். லியானகே 22 (31) ஓட்டங்களும், விக்ரமசிங்கே 17 (27) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கமிந்து மெண்டிஸ் அரைசதம்
அரைசதம் அடித்த மெண்டிஸ் 64 (66) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.
ரூர்க்கே ஓவரில் 8வது விக்கெட்டாக கமிந்து மெண்டிஸ் வெளியேற, இஷான் (4) மற்றும் தீக்ஷணா (6) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இலங்கை அணி 30.2 ஓவரில் 142 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, நியூசிலாந்து 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 63 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |