மே.தீவுகளை வேரோடு சாய்த்த இருவர்! புயல்வேக பந்துவீச்சில் பறந்த ஸ்டம்புகள்
இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் சின்கிளைர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
யன்னிக் காரியா தனது முதல் சர்வதேச அரைசதத்தை 2வது போட்டியில் அடித்துள்ளார்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
பார்படாஸில் நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 48.2 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின் ஆலன் 96 ஓட்டங்களும், மிட்செல் 41 ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் சின்கிளைர் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
A maiden 4 wicket haul for Kevin Sinclair today!?? #WIvNZ #MenInMaroon pic.twitter.com/304v5G5sX1
— Windies Cricket (@windiescricket) August 19, 2022
மழை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 41 ஓவர்களில் 212 ஓட்டங்கள் வெற்றி இலக்காக மாற்றி அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, போல்ட் மற்றும் சௌதீ பந்துவீச்சில் சரிந்தது.
தொடக்க வீரர்களை போல்ட் வெளியேற்ற, அதன் பின்னர் வந்த ப்ரூக்ஸ் மற்றும் கிங்-கை, டிம் சௌதீ ஆட்டமிழக்க செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அப்போது கைகோர்த்த யன்னிக் காரியா மற்றும் அல்சாரி ஜோசப் கூட்டணி அணியை மீட்க போராடியது. 49 ஓட்டங்கள் எடுத்திருந்த அல்சாரி ஜோசப் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடைசி விக்கெட்டாக யன்னிக் காரியா 52 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சாண்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 35.3 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு சுருண்டது. சௌதீ 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Southee finishes with 4-22 & Boult 3-18 to back up the batsmen's earlier graft and help level the series! #WIvNZ pic.twitter.com/jkaLKQ2YHO
— BLACKCAPS (@BLACKCAPS) August 20, 2022
பின் ஆலன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி 21ஆம் திகதி நடக்கிறது.