நியூஸிலாந்திற்கு பயத்தை காட்டிய இருவர்! பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
டேர்ல் மிட்செல்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹாக்லே ஓவலில் நடந்தது. 
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 269 ஓட்டங்கள் எடுத்தது. டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) 119 ஓட்டங்களும், டெவோன் கான்வே 49 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கேம்பல் 4 ஓட்டங்களில் வெளியேறினார். எனினும் அதனசி, கார்ட்டி கூட்டணி 60 ஓட்டங்கள் குவித்தது.
அதனசி (Athanaze) 29 ஓட்டங்களில் சான்டனர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் கேசி கார்ட்டி 32 ஓட்டங்களில் வெளியேற, ஷாய் ஹோப் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
எனினும் ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அரைசதம் அடித்த அவர் 61 பந்துகளில் 55 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசி அவுட் ஆனார். அப்போது மேற்கிந்திய தீவுகள் 45.1 ஓவரில் 209 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 
கிரேவ்ஸ், ஷெப்பர்ட் அதிரடி
அணியின் வெற்றிக்கு 29 பந்துகளில் 61 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஜஸ்டின் கிரேவ்ஸ் (Justin Greaves), ரோமரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd) இருவரும் தங்கள் அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்துக்கு பயத்தை காட்டினர். 
இதனால் ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெறும் நிலைக்கு சென்றது. ஆனால் கடைசி ஓவரை ஜேக்கப் டுஃபி சிறப்பாக வீச, மேற்கிந்திய தீவுகள் 262 ஓட்டங்கள் எடுத்தால் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
கிரேவ்ஸ் ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 38 ஓட்டங்களும், ஷெப்பர்ட் 19 பந்துகளில் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளும், ஹென்றி, ஸகாரி மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |