நியூசிலாந்து வீரருக்கு 2021ஆம் ஆண்டிற்கான Spirit of Cricket விருது: ICC அறிவிப்பு!
நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் டேரில் மிட்செலுக்கு 2021ஆம் ஆண்டிற்கான ICCயின் Spirit of Cricket என்ற விருது வழங்கப்படுகிறது.
2021யில் நடைபெற்ற ICC டி 20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான அரை இறுதி விளையாட்டில் அவரது செயற்பாட்டிற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ICC யின் உலகக்கோப்பை டி 20 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் எதிரணி வீரர் தடுத்ததை தொடர்ந்து, நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் சிங்கள் எடுக்க தனது மறுமுனை வீரருக்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் அவருக்கு 2021 ஆண்டிற்கான Spirit of Cricket என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது, மற்றும் அவரது செயலை கிரிக்கெட்டிற்கான விதிமுறை புத்தகத்தின் முன்னுரையிலும் சேர்த்துள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை அணியில் ஒரு அங்கமாக இருந்தது பெருமை தருவதாவும், இந்த விருது எனக்கு வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி தருவாகவும் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் எங்களது விளையாட்டில் கவனம் செலுத்தியதாகவும், அதனால் எங்களுக்கு அந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார்.
டேரில் மிட்செல் இந்த விருதை பெறும் நான்காவது நியூஸிலாந்து வீரர் ஆவார். இதற்கு முன்பு Daniel Vettori, Brendon McCullum மற்றும் Kane Williamson ஆகியோர் இந்த விருதுகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.