மகளிர் டி20 உலக கோப்பை போட்டி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி!
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
தொடக்க வீராங்கனைகளான சுசி பேட்ஸ்(Suzie Bates) 26 ஓட்டங்களுடனும், ஜார்ஜியா ப்ளிம்மர்(Georgia Plimmer) 33 ஒட்டங்களுடன் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
An eventful first innings in Sharjah ?
— ICC (@ICC) October 18, 2024
Who will win the second semi-final clash? ?#T20WorldCup | #WIvNZ: https://t.co/4tDarlDirK pic.twitter.com/HxSeMHEntT
இருப்பினும் அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவறியதால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் டீன்ட்ரா டாட்டின்(Deandra Dottin) 4 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்கள் மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து
இறுதிப் போட்டிக்கான வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆரம்பம் முதலே தடுமாற்றம் காணப்பட்டது.
NEW ZEALAND ARE IN THE FINAL ?
— ICC (@ICC) October 18, 2024
They pull off a stunning win over West Indies to make their first Women's #T20WorldCup final since 2010 ?#WhateverItTakes | #WIvNZ pic.twitter.com/exA6aajTDE
டீன்ட்ரா டாட்டின் மட்டும் 22 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்காக போராடினார்.
அவரும் அமெலியா கெர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனால் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
New Zealand set up a #T20WorldCup final showdown with South Africa ??⚔️??
— Sport360° (@Sport360) October 18, 2024
An epic finale awaits at the Ring of Fire ?️?#WIvNZ pic.twitter.com/O8CNH6xbJQ
இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி 20ம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |