கேட்ச் பிடிக்காமல் நின்ற வீரர்கள்! பாகிஸ்தானை ஒப்பிட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ
யார் கேட்ச் பிடிப்பது என்ற குழப்பத்தில் விக்கெட்டை தவறவிட்ட நியூசிலாந்து வீரர்கள்
பாகிஸ்தானை போல் நியூசிலாந்து வீரர்களும் ஃபீல்டிங் செய்வதாக கிண்டலடிக்கும் ரசிகர்கள்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் கேட்சை பிடிக்காமல் நின்ற வீடியோ வைரலாகியுள்ளது.
நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருக்கும்போது, அந்த அணி வீரர் ஷாண்டோ அடித்த ஷாட் எட்ஜ் ஆகி உயரே எழுந்தது. அப்போது கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கான்வே, ஃபீல்டிங்கில் இருந்த பிலிப்ஸ் இருவரும் ஓடி வந்தனர்.
ஆனால், பந்துவீச்சாளர் போல்ட் கேட்ச் பிடிக்க முயற்சி செய்யாமல் பிலிப்ஸை பார்த்து நின்றார். தூரத்தில் இருந்து ஓடி வந்ததால் பிலிப்ஸால் கேட்ச் பிடிக்க முடியாமல் போனது, எனினும் போல்ட் நினைத்திருந்தால் கேட்ச் செய்திருக்கலாம்.
Pakistani Cricket Team is also in New Zealand. Side effects may be? pic.twitter.com/5vdPmEM7qH
— Guru Gulab Khatri (@hawaijahajwale) October 12, 2022
வீரர்களின் இந்த குழப்பத்தால் ஷாண்டோவின் விக்கெட் தப்பியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இதே போல் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு கேட்ச்சை பிடிக்காமல் விட்டனர்.
அந்த வீடியோவை ஒப்பிட்டு நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தானின் ஃபீல்டிங்கால் ஈர்க்கப்பட்டு விட்டனர் என கிண்டலாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.