உலகக்கோப்பையில் இங்கிலாந்தை சம்பவம் செய்த இருவர்! 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி
உலகக்கோப்பை தொடர் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.
ரூட் அபாரம்
அகமதாபாத் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து 282 ஓட்டங்கள் குவித்தது.
ஜோ ரூட் 77 (86) ஓட்டங்களும், பட்லர் 43 (42) ஓட்டங்களும் எடுத்தனர். ஹென்றி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வில் யெங் அவுட் ஆனார்.
ஆனால், பின்னர் கைகோர்த்த ரச்சின் ரவீந்திரா - டெவோன் கான்வே ஜோடி ருத்ர தாண்டவம் ஆடியது.
https://t.co/OlXFhgT8kS pic.twitter.com/4F8ficFM1x
— England Cricket (@englandcricket) October 5, 2023
நியூசிலாந்து வெற்றி
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்த இந்த ஜோடி 36.2 ஓவரில் 283 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தது.
Drinks in the chase! 138/1 with 283 the target. @cricketwgtninc duo Devon Conway 70* and Rachin Ravindra 67* in the middle in Ahmedabad. Follow play LIVE in NZ with @skysportnz. LIVE scoring | https://t.co/aNkBrDiAuv #CWC23 pic.twitter.com/jMvH6mdbvo
— BLACKCAPS (@BLACKCAPS) October 5, 2023
அதகளம் செய்த கான்வே 121 பந்துகளில் 152 ஓட்டங்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும்.
ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 123 ஓட்டங்கள் விளாசினார்.
100 for Devon Conway! His fourth ODI century this year (2* in India, 1 in Pakistan and 1 in England). Brings it up from 83 balls in Ahmedabad against @englandcricket. Follow play LIVE in NZ with @skysportnz. LIVE scoring | https://t.co/aNkBrDiAuv #CWC23 pic.twitter.com/01DzSHLlFV
— BLACKCAPS (@BLACKCAPS) October 5, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |