ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்களின் ஆட்டத்தை பார்த்து மிரண்ட பிரபல நியூசிலாந்து வீரர்!
இந்திய வீரர்கள் பயிற்சிப் போட்டியில் விளையாடியதை பார்த்து தான் மிரண்ட போனதாக நியூசிலாந்து அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து மோதும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 18ம் திகதி தொடங்கவுள்ளது.
இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றிருக்கும் ராஸ் டெய்லர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, இந்திய வீரர்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தைப் பார்த்தால், அதை அவர்கள் பயிற்சி போட்டியாக நினைத்து விளையாடியதுபோல் தெரியவில்லை.
ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை வெளிக்காட்டியுள்ளனர். கொடுக்கப்பட்ட சிறிது நாட்களில் அவர்கள் இப்படி தயாராகி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
துடுப்பாட்டத்தில் மட்டுமில்லாமல் அவர்களின் பந்து வீச்சும் மிக வலுவானதாகவே இருக்கிறது என இந்திய அணியை ராஸ் டெய்லர் புகழ்ந்துள்ளார்.