இலங்கைக்கு 37 ஓவரில் 256 ரன் இலக்கு! 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி விரைவாக 4 விக்கெட்டுகளை இழந்தது.
ரச்சின்-சாப்மேன் அரைசதம்
ஹாமில்டனின் Seddon Park மைதானத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 37 ஓவர்களில் 255 ஓட்டங்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 63 பந்துகளில் 79 ஓட்டங்களும், சாப்மேன் 52 பந்துகளில் 62 ஓட்டங்களும் விளாசினர்.
மஹீஷ் தீக்ஷணா 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், அசிதா மற்றும் இஷான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Two for Jacob Duffy! A faint Kusal Mendis edge, given not out on-field, but the review is successful. Follow the Sri Lanka chase LIVE and free in NZ with TVNZ DUKE, TVNZ+, Sport Nation and The ACC. LIVE scoring | https://t.co/Yebpn1QwRR 📲 #NZvSL pic.twitter.com/0PeHeQEReA
— BLACKCAPS (@BLACKCAPS) January 8, 2025
விக்கெட் சரிவு
பின்னர் இலங்கை அணி இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது ஓவரிலேயே நிசங்கா (1) ஆட்டமிழந்தார். அடுத்து குசால் மெண்டிஸ் 2 ஓட்டங்களில் டுஃபி ஓவரில் ஆட்டமிழக்க, அவிஷ்கா பெர்னாண்டோவை 10 ஓட்டங்களில் மேட் ஹென்றி வெளியேற்றினார்.
அணித்தலைவர் அசலங்கா 4 ஓட்டங்களில் இருந்தபோது சாண்ட்னரால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதனால் இலங்கை அணி 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
Carbon copy! From Wellington to Hamilton - Mitchell Santner in the run-out action again! Sri Lanka four down early LIVE and free in NZ on TVNZ DUKE and TVNZ+ #NZvSL pic.twitter.com/J5HWE746ZL
— BLACKCAPS (@BLACKCAPS) January 8, 2025
தற்போது வரை இலங்கை அணி 16 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 85 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. கமிந்து மெண்டிஸ் (34), சமிந்து விக்ரமசிங்கே (4) களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |