உலகக்கோப்பை திருவிழா: மூவர் அரைசதம் விளாசல்..நெதர்லாந்துக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 322 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அரைசதம் விளாசிய நியூசிலாந்து வீரர்கள்
ஹைதராபாத்தில் நடந்து வரும் உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் குவித்தனர்.
AFP
கான்வே 32 ஓட்டங்களில் இருந்தபோது வான் டெர் மெர்வ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வில் யங்கும் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 144 ஆக உயர்ந்தபோது, வில் யங் 70 ஓட்டங்களில் மீகெரென் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதகளம் செய்த சான்ட்னர்
அதன் பின்னர் ரவீந்திரா 51 ஓட்டங்களும், டெர்ல் மிட்செல் 48 ஓட்டங்களும் விளாசினர். கேப்டன் லாதம் அதிரடியாக 46 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் சரவெடியாய் வெடித்த சான்ட்னர் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் நியூசிலாந்து 322 ஓட்டங்கள் குவித்தது.
நெதர்லாந்து அணியின் தரப்பில் ஆர்யன் டட், மீகெரென் மற்றும் மெர்வ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |