பந்துவீச்சிலும் திணறடித்த இலங்கை அணி! ஓட்டங்கள் எடுக்க தடுமாறும் நியூசிலாந்து
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை அதிரடி ரன் குவிப்பு
நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் நாள் இன்னிங்ஸில், இலங்கை அணி 355 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 87 ஓட்டங்களும், கேப்டன் கருணரத்னே 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
Innings break: Sri Lanka added 50 runs to their overnight total. SL 355 (92.4 ov)
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 9, 2023
Match Centre: https://t.co/FkzUTbHr4y#NZvSL
?: @photosportnz pic.twitter.com/Cd2U2QMPhi
நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ 5 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிவோன் கான்வே 30 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
@AFP
ஒரு ரன்னில் வெளியேறிய வில்லியம்சன்
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சனை ஒரு ரன்னில் லஹிரு குமார வெளியேற்றினார். பின்னர் வந்த நிக்கோல்ஸையும் அவரே ஆட்டமிழக்க செய்தார்.
அடுத்து களமிறங்கிய பிளண்டல் 7 ஓட்டங்களில் ரஜிதா பந்துவீச்சில் அவுட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
@AFP
இலங்கையின் லஹிரு குமார, அசிதா பெர்ணான்டோ தலா இரண்டு விக்கெட்டுகளும், கசுன் ரஜிதா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
@AFP