நியூசிலாந்துக்கு அடி மேல் அடி கொடுத்த வங்கதேச பவுலர்கள்! தோல்வியை தவிர்க்க போராட்டம்
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
கேப்டன் ஷாண்டோ 105
சில்ஹெட் டெஸ்டில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 338 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
கேப்டன் ஷாண்டோ 105 ஓட்டங்களும், ரஹிம் 67 ஓட்டங்களும், மிராஸ் 50 ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள்: இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்
பின்னர் நியூசிலாந்து அணிக்கு 332 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
Twitter (@BCBtigers)
நியூசிலாந்துக்கு அதிர்ச்சி
முதல் ஓவரிலேயே ஷோரிபுல் இஸ்லாம் அதிர்ச்சி கொடுத்தார். அவரது ஓவரில் டாம் லாதம் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.
அதன் பின்னர் டைஜுல் இஸ்லாம் நியூசிலாந்து விக்கெட்டுகளை சரித்தார். அவரது ஓவரில் கேன் வில்லியம்சன் (11), கான்வே (22) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
Twitter (@BCBtigers)
அடுத்து வந்த டாம் பிளெண்டல் 6 ஓட்டங்களில் டைஜுல் ஓவரில் அவுட் ஆனார். பின்னர் கிளென் பிலிப்ஸ் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
AFP
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டேர்ல் மிட்செல் அணியை மீட்க போராடி வருகிறார். 4வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 113 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மிட்செல் 44 ஓட்டங்களுடனும், சோதி 7 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச தரப்பில் டைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளும், ஷோரிபுல், மிராஸ் மற்றும் நயீம் ஹசன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். நியூசிலாந்து வெற்றிக்கு கடைசி நாளில் இன்னும் 219 ஓட்டங்கள் தேவை.
Twitter (@BCBtigers)
Twitter (@BCBtigers)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |