NZ vs SA Test 2024: சதம் அடித்து கலக்கிய ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் Kane Williamson, RachinRavindra சதம் அடித்து அசத்தியுள்ளனர்.
NZ vs SA 1st Test: இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் நாளில் முன்னணியில் உள்ளது.
நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ஓவர்களில் 258 ஓட்டங்கள் எடுத்தது.
கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா சதம்
கிவிஸ் டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் (259 பந்துகளில் 112 ஓட்டங்கள், 15 பவுண்டரி), ரச்சின் ரவீந்திரன் (211 பந்துகளில் 118 ஓட்டங்கள், 13 பவுண்டரிகள், 1 சிக்சர்) இருவரும் சதம் அடித்துள்ளனர்.
இது வில்லியம்சனின் 30வது டெஸ்ட் சதம் மற்றும் ரவீந்திராவின் முதல் சதம் ஆகும்.
மவுங்கானுவில் நடைபெற்று வரும் இந்த முதல் டெஸ்டில், அனுபவமற்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் நீல் பிராண்ட் நாணயசுழற்சியை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கிவிஸ் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாதம் 20 ஓட்டங்களுடனும், டெவோன் கான்வே ஒரே ஒரு ஓட்டத்துடனும் வெளியேறினர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி வெறும் 39 ஓட்டங்களுக்கு தொடக்க ஆட்டக்காரர்களை இழந்தது.
ஆனால், மூன்றாவது, நான்காவது இடத்தில் வந்த Kane Williamson மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்த Rachin Ravindra இருவரும் களமிறங்கிய பிறகு தென்னாப்பிரிக்க அணியை இன்னொரு விக்கெட் எடுக்க விடவில்லை.
இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 219 ஓட்டங்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க அனுபவமற்ற சஃபாரி பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தும் விக்கெட் எடுக்க முடியவில்லை.
டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், கிளென் பிலிப்ஸ் மற்றும் மிட்செல் சான்ட்னர் போன்ற பேட்ஸ்மேன்களுடன், கிவிஸ் களமிறங்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
NZ vs SA 1st Test Day 1, Rachin Ravindra, Kane Williamson century, New Zealand, South Africa