தனி ஆளாக போராடி சதமடித்த கேமரூன் கிரீன்.., வெற்றியை கைப்பற்றுமா அவுஸ்திரேலியா?
நியூசிலாந்துக்கு எதிராக முதல் நாள் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
அவுஸ்திரேலியா Vs நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற T20 தொடரை 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்நிலையில், 2 டெஸ்ட் தொடர் கொண்ட முதலாவது போட்டியானது இரு அணிகளுக்கு இடையே வெலிங்டனில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
சதமடித்த கேமரூன் கிரீன்
முதல் இன்னிங்க்சில் அவுஸ்திரேலிய அணிக்கு சுமித் மற்றும் உஸ்மான் கவாஜா நல்ல தொடக்கத்தை கொடுத்து, சுமித் 31 ஓட்டங்களிலும் , கவாஜா 33 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மிட்செல் மார்ஷ் 40 ஓட்டங்களிலும் , அலேக்ஸ் கேரி 10 ஓட்டங்களிலும், ஸ்டார்க் 9 ஓட்டங்களிலும் , கம்மின்ஸ் 16 ஓட்டங்களிலும், லயன் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தாலும் தனி ஆளாக போராடி கேமரூன் கிரீன் சதமடித்தார். இதனால் அவுஸ்திரேலிய அணி முதல் நாளில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து தரப்பில் இருந்து மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா 1 விக்கெட்டும் வில்லியம் ஒ ரூர்க் மற்றும் ஸ்காட் குகெலீஜ்ன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 2 -வது நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |