நியூசிலாந்து அணிக்கு 107 ஓட்டங்கள் இலக்கு: 2வது இன்னிங்சில் இந்திய அணி 462 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக திட்டமிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்னதாகவே முடிவடைந்தது.
நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்டபோது, மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சிறிது நேரத்தில், மழை பெய்யத் தொடங்கி, ஸ்டம்புகள் அறிவிக்கப்பட்டன. நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 0/0.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ஓட்டங்கக்கு சுருண்டது. நியூசிலாந்து அணி 402 ஓட்டங்கள் குவித்து 356 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் சர்பராஸ் கான் 150, ரிஷப் பண்ட் 99, விராட் கோலி 70, ரோகித் சர்மா 52, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ஓட்டங்கள் எடுத்தனர். மற்ற பேட்டர்கள் சிறப்பான எதுவும் செய்ய முடியவில்லை.
நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓருர்கே, மேட் ஹென்றி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சவுதி, கிளென் பிலிப்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |