ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்ட இந்தியா, நியூசிலாந்து முதல்நாள் ஆட்டம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் தொடங்க இருந்தது.
??? ?: ????? ????? ?
— Sportskeeda (@Sportskeeda) October 16, 2024
Not the news we wanted from Bengaluru ⛈️
The first session has unfortunately been washed out?#INDvNZ #India #Cricket #Sportskeeda pic.twitter.com/OFL74ZW56W
கைவிடப்பட்ட முதல்நாள் ஆட்டம்
ஆனால், தொடர் மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமானது. இதனால் மதியம் வரை நாணய சுழற்சி செய்யப்படவில்லை.
பின்னர் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெங்களூரு ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் இருப்பதால், நகரத்தில் நாள் முழுவதும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |